ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் ஆசையால் தெலுங்கு படங்களை நிராகரித்து விட்டு மும்பைக்கு சென்றார் இலியானா. போன புதிதில் இலியானாவிற்கு சிகப்பு கம்பளம் விரித்த பாலிவுட் பின்னர் நோ என்ட்ரி சொல்ல தயாரானது. அந்த நேரத்தில் இலியானா நடித்த ருஸ்டம் எனும் ஹிந்தி திரைப்படம் வெளிவந்து வசூலில் ரூ 100 கோடியை தொட்டுவிட்டது. இயக்குனர் சுரேஷ் தேசாய் இயக்கத்தில் அக்ஷ்ய் குமார் நாயகனாக நடித்த ருஸ்டம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கும் இலியானாவிற்கு மேலும் இன்ப அதிர்ச்சியாய் அஜய் தேவ்கன் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படமும் வெற்றி பெற்றுவிட்டால் பாலிவுட்டில் தனக்கென நிரந்தர இடம் கிடைக்கும் என இலியானா நம்பிக்கையில் உள்ளாராம். அஜய் தேவ்கன் இலியானா ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் படத்திற்கு பாட்ஷஹோ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் இம்ரான் ஹஸ்மி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.