பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜோக்கர் பட டைரக்டர் ராஜூ முருகன், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஹேமா சின்ஹா திருமணம் இன்று சென்னை பெசன்ட்நகர் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் நடந்தது.
குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஜூ முருகன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ராஜூ முருகன், ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் டைரக்டர்கள் வரிசையில் இணைந்தார். இதைத் தொடர்ந்து கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படத்திற்கு ராஜூ முருகன் வசனம் மட்டும் எழுதி இருந்தார். சமீபத்தில் ஜோக்கர் என்ற படத்தை தானே எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்தார். இப்படமும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
பிரபல இயக்குனராக மாறி இருக்கும் ராஜூ முருகன், டிவி தொகுப்பாளினியாக இருந்த ஹேமா சின்ஹாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.