பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல ஆணழகர் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம் இயக்கி உள்ள படம் கனவு வாரியம். இந்தப் படம் சர்வதேச அளவில் பட விழாக்களில் விருதுகளை குவித்து வந்தது. அமெரிக்காவின் ரெமி விருது பெற்ற ஒரே தமிழ் படம் இது. இதுதவிர சீனா, கொரியா, இத்தாலி, உக்ரைன், கென்யா ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச படவிழாக்களிலும் விருதுகளை பெற்றிருக்கிறது.
இதுவரை 6 சர்வதேச விருதுகளை பெற்ற படம் தற்போது ரஷ்யாவில் 7வது விருதை பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 24 முதல் 28 வரையில் ரஷியாவில் நடந்த இண்டர்நேஷனல் மோட்டிவேஷன்ஸ் பிலிம் பெஸ்டிவல் என்ற சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் திரையிடப்பட்ட கனவு வாரியம் படத்திற்கு சிறந்த யுனிக் பிலிம் (தனித்துவமான படம்) என்ற விருது கிடைத்துள்ளது. படவிழாவில் கலந்து கொள்ள சென்ற அருண் சிதம்பரம் விருதுடன் திரும்பியிருக்கிறார்.
ஒரு கிராமம் மின் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. அந்த தட்டுப்பாட்டை போக்க அந்த கிராமத்து இளைஞன் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறான். அதனால் ஏற்படும் சுவாரஸ்யமான மற்றும் சீரியசான பிரச்சினைகள்தான் கதை. இதில் அருண் சிதம்பரமே ஹீரோவாக நடித்துள்ளார். அவரது தந்தை சிதம்பரம் தயாரித்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.