Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜெயா டி.வி.,யில் சிம்ரன் மட்டுமல்ல மதன், யூகி சேது மற்றும் பலரும்...!!

04 செப், 2011 - 15:59 IST
எழுத்தின் அளவு:

13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயா டி.வி., அந்த சந்தோஷத்தில், நேயர்களுக்கு பல புதுமையான நிகழ்ச்சிகள் பலவற்றையும், பழைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் புதிய மெருகேற்றியும் நிறைய புதுமைகளை செய்து, நிறைய நிகழ்ச்சிகளையும், லைவ்ஷோக்களாகவும், டாக் ஷோக்களாகவும், கேம்ஷோக்களாகவும் வழங்க இருக்கிறது!

அதன் முதற்கட்டமாக ஜெயா டி.வி.யில் பத்து வருடங்களாக புகழ்பெற்ற நிகழ்ச்சியான ஜாக்பாட் நிகழ்ச்சியை இனி நடிகை சிம்ரன், இன்று செப்.4 முதல் நடத்த இருப்பது போன்றே, திங்கட்கிழமை பிரபல கார்ட்டூனிஸ்டும், பத்திரிகையாளருமான மதனின் திரை விமர்சனம் அடங்கிய மதன் டாக்கீஸ், வியாழக்கிழமைகளில் மாஜி ஹீரோ சுரேஷ் நடத்தும் ஜெயிக்கப்போவது யாரு...?, வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தின் சமையல் சாம்பியன் யாரு...? எனும் சமையல் பரிசு போட்டி நிகழ்ச்சி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் யூகியுடன் யூகியுங்கள் எனும் வித்தியாசமான வினாடி-வினா போட்டி நிகழ்ச்சி மற்றும் சனிக்கிழமைகளில் அனுஹாசன் நடத்தும் சூப்பர் கிட் எனும் பள்ளி மாணவர்களுக்கான பல லட்சம் பரிசு போட்டிகளுக்கான நிகழ்ச்சி என களைகட்ட இருக்கிறது ஜெயா டி.வி.,

இதுசம்பந்தமான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை சிம்ரன், மதன், யூகி சேது, சமையல் செஃப்கள் சவுந்திராஜன், கவுசிக், மனோகர் உள்ளிட்டோருடன் ஜெயா டி.வி., நிர்வாகிகளும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தனர். அவர்களது பதில்களை போன்றே ஜெயா டி.வி.யின் புதிய நிகழ்ச்சிகளும் பளிச்சிட வாழ்த்துவோம்!

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

இந்து.K - lagos,இந்தியா
13 மார், 2012 - 11:09 Report Abuse
 இந்து.K welldone விஷேஸ் போர் yugisethu!!! அனுஹாசன்! ஆல் ஆர் பெஸ்ட்!! சில்றன் வி ர இன் டிபிபிறேன்ட் காண்டினென்ட் சோ வி ர கோஇங் டு மிஸ் இட்........
Rate this:
vincent - Newdelhi,இந்தியா
09 செப், 2011 - 20:16 Report Abuse
 vincent சிம்ரன்க்கு தமிழ் சொல்லிகொடுக்கபோறது யார்? மதன் ஆட்சி மாறியவுடன் டிவி மாத்துகிறார் சம்பாரிக்கட்டும்
Rate this:
suresh - madurai,இந்தியா
05 செப், 2011 - 10:11 Report Abuse
 suresh எவனும் பார்கமாட்டன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in