தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரசியல் பிரபலமும் பாலிவுடின் முன்னாள் கனவுகன்னியுமான ஹேமமாலினி மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கின்றார். பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தில் ஹேமமாலினி பாலகிருஷ்ணாவின் அம்மா வேடத்தில் ராஜமாதாவாக நடிக்கின்றார்.
மத்தியபிரதேசத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் ஹேமமாலினி கலந்து கொண்டுவருகின்றார். தனது தந்தை என்.டி.ஆருடன் நடித்த ஹேமமாலினி பதினைந்து வருடங்கள கழித்து என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பாலகிருஷ்ணா ஹேமமாலினிக்கு படப்பிடிப்பு தளத்தில் சொகுசான ஏற்பாடுகளை செய்துள்ளாராம்.
மேலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ஹிந்துபூரில் தயாரான விலை உயர்ந்த சேலை ஒன்றையும் பாலகிருஷ்ணா, ஹேமமாலினிக்கு பரிசளித்துள்ளாராம். இயக்குனர் க்ரிஷ் இயக்கும் கௌதமிபுத்ர சடர்கனி படத்தில் கௌதமிபுத்ர மன்னனாக நடிக்கும் பாலகிருஷ்ணாவின் மனைவியாக நடிகை ஸ்ரேயா நடிக்கின்றார். இத்திரைப்படம் 2017 பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.