பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யாவுடன் கஜினி, ஆதவன், மாஸ் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அதையடுத்து கதையின் நாயகியாகி விட்ட நயன்தாரா, சூர்யா மட்டுமின்றி எந்த முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்கும் வாய்ப்பினை பெறவில்லை. மாறாக, ஜெயம்ரவி, விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் என்று நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் சூர்யாவுடன் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கி விக்னேஷ்சிவன் இயக்கும் அந்த படத்தை நயன்தாராவே தயாரித்து நாயகியாகவும் நடிக்கிறாராம். மேலும், தான் படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது அஜித், விஜய் போன்றவர்களை வைத்து படம் பண்ணத்தான் ஆசைப்பட்டாராம் நயன்தாரா. ஆனால் அவர்களது கால்சீட் கிடைப்பதற்கான அறிகுறிகள் இல்லையாம். அதனால் இப்போது சூர்யாவிடம் பேசியிருக்கிறாராம் நயன்தாரா. கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.