தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்து கடவுள்கள் முதல் நடிகர்கள் வரை யாரை குறித்தும் எளிதில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்துபவர் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த ஓ காதல் கண்மணி படத்தை பார்த்து விட்டு ராம் கோபால் வர்மா, மம்மூட்டியைக் காட்டிலும் அவரது மகன் நன்றாகவே நடித்துள்ளார் என கூறிய மலையாள ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
அதேப்போல் தற்போது ஜனதா கேரேஜ் திரைப்படத்தைப் பார்த்து விட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராம் கோபால் வர்மா, ஜூனியர் என்.டி.ஆரின் முந்தை படத்தின் சாயல் இல்லாமல் புதுவிதாமாக தனது ஸ்டைலை மாற்றி நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். என்.டி.ராமா ராவ் போன்று தேவையில்லாத மாஸ் விஷயங்களை நாணாகு ப்ரேமதோ படம் வரை ஜூனியர் என்.டி.ஆர் விடாமல் பிடித்து வந்தார். ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அவற்றை மாற்றியுள்ளது பாராட்டுக்குரிய விஷயம் என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். என்.டி,ஆரை பாராட்டுவது போல் மூத்த நடிகர் என்.டி.ராமா ராவ்வின் ஸ்டைலை மட்டம் தட்டுவதாக அமைந்த ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து டோலிவுட் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.