ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் இரண்டு வேடங்களில் நடித்து 1997-ம் ஆண்டு வெளிவந்த படம் ‛ஜூட்வா'. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்க உள்ளார். சமீபத்தில் ஜூட்வா-2 பற்றி வருண் தவானிடம் பேசியபோது அவர் கூறியதாவது... ‛‛கதை ரெடியானதும் முதலில் சல்மானிடம் தான் அதை கூற உள்ளோம். நானும் என் தந்தையும் அவரை சந்தித்து இதுபற்றி பேச இருக்கிறோம். இது அவருக்கு நான் செய்யும் மரியாதையாக கருதுகிறேன். இதில் எனக்கும் ஒரு நன்மை இருக்கிறது. இப்படம் தொடர்பாக அவரிடம் பல விஷயங்களை நான் கேட்கவும், அவரிடம் கற்றுக்கொள்ளவும் முடியும் என்று கூறியுள்ளார்.