தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போகிற போக்கை பார்த்தால் ‛வீரே தி வெட்டிங்' படம் உருவாகுமா.? உருவாகாதா.? என்ற கேள்வி தற்போது எழத்தொடங்கியுள்ளது. வீரே தி வெட்டிங் படத்தில் கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உள்ளனர். ஆனால் கரீனா கர்ப்பமாக இருப்பதால் அவர் நடிக்க மாட்டார் என்று செய்தி கிளம்பியது. பின்னர் தான் அக்டோபரில் சில காட்சிகளில் நடித்துவிட்டு பின்னர் குழந்தை பிறப்பிற்கு பின்னர் நடிக்க இருப்பதாக கரீனா கூறினார். இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க இருந்த ஏக்தா கபூர், இப்போது தயாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், பாலாஜி மோசன் பிக்சர்ஸ் சார்பில் ஏக்தா கபூர் தயாரித்த ‛பிளையிங் ஜாட்' படம் ரிலீஸானது. ஆனால் இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான வசூலை எட்டிவில்லை, இதனால் இந்த நிறுவனத்திற்கு நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதனால் ஏக்தா, ‛வீரே தி வெட்டிங்' படத்தை தயாரிக்கமாட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.