ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் 'பாஸ்கர் தி ராஸ்கல்', 'பத்தேமாறி', என தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்த மம்முட்டிக்கு இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே இறங்கு முகம் தான்..இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த வருடத்தில் வெளியான அவரது மூன்று படங்களையும் இயக்கியவர்கள் அறிமுக இயக்குனர்கள் தான். புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதற்காக மம்முட்டி முன்வந்து நடித்த இந்தப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாததால் அடுத்து தனது நண்பரும் முன்னணி இயக்குனருமான ரஞ்சித்தின் டைரக்சனில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி. இந்தபடத்திற்கு 'வம்பன்' என பெயர் வைத்துள்ளார்கள்.
மம்முட்டியும் ரஞ்சித்தும் நம்ம ஊர் கே.எஸ்.ரவிகுமார்-சரத்குமார் மாதிரி பலமான நட்பு பின்னி கொண்டவர்கள்.. பாலேரி மாணிக்கம், குஞ்சானந்தண்டே கதா, ஒரு பத்திர கோலப்பதக்கத்திண்டே கதா' என பல படங்களில் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் தான். அதனால் அடுத்து மம்முட்டியின் படத்தை இவர் இயக்குவதில் பெரிய ஆச்சர்யம் இல்லை.. மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ரஞ்சித் பல வருடங்களுக்கு முன் இயக்குனராக அறிமுகமானது மோகன்லால் படத்தில் தான். ஆனால் மம்முட்டியின் ஆஸ்தான இயக்குனர்களில் முக்கியமானவராக மாறிய இவர் மம்முட்டிக்கு கலாத்திற்கும் பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல படங்களை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.