நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
புதுநெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு ரஜினி தவிர அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர். பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கெளதம் கார்த்திக் நடித்துள்ள முத்துராமலிங்கம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க முதலில் சுகன்யா தான் கமிட்டாகியிருந்தார். ஆனால் இப்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த படத்தில் சுகன்யா நடிக்கவில்லை என்கிறார்கள்.
காரணம், முத்துராமலிங்கம் படத்தில் நடிக்க சுகன்யா தயாராக இருந்தபோதும், அவரிடம் கால்சீட் வாங்கிய தேதியில் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். பின்னர் அவர்கள் அழைத்தபோது அதே தேதியில் அமெரிக்காவில் இருந்தாராம் சுகன்யா. அதனால்தான் ஆரோகனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரை சுகன்யா நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். அவரும் பல படங்களில் நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருப்பவர் என்பதால் இந்த படத்தில் கெளதம் கார்த்திக்கின் அம்மாவாக சிறப்பாக நடித்திருக்கிறாராம். அதனால் இதுவரை விஜி சந்திரசேகர் நடித்த அம்மா வேடங்களில் இந்த படம் அவருக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கும் என்கிறார்கள்.