'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் நடித்த படத்தின் தலைப்பு என்பதால் அந்த படத்திற்கு இணையாக இந்த படத்தில் காமெடி காட்சிகள் இருக்க வேண்டும் என்பதற்காக டயமிங் டயலாக்கில் இருந்து கொஞ்சம் விலகி பாடி லாங்குவேஜ் காமெடியும் செய்திருக்கிறாராம் சந்தானம். ஆனந்த் பால்கி இயக்கும் இந்த படத்திலும் தில்லுக்குத்துட்டு படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடித்த ஆனந்த்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் சில காட்சிகள் படமாக்கிய பிறகும், அதில் தனக்கு திருப்தி இல்லாதபட்சத்தில் மீண் டும் அதை படமாக்க சொல்கிறாராம் சந்தானம். அதன்காரணமாக ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை விட அதிக நாட்கள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சர்வர்சுந்தரம் படத்தின் படப்பிடிப்பு இப்போதுதான் கிளைமாக்ஸை நெருங்கியுள்ளதாம். இன்னும் 15 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்கிறார்கள்.