Advertisement

சிறப்புச்செய்திகள்

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநர் ரஞ்சித்திற்கு என்னை பிடிக்க காரணம் இதுதான் - அட்டகத்தி தினேஷ்

03 செப், 2016 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Why-Ranjith-likes-Attakaththi-Dinesn

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் உள்குத்து. கார்த்திக் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ்-நந்திதா ஜோடி சேர்ந்துள்ளனர். அவர்களுடன் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், திலீப் சுப்பராயன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.


அப்போது தினேஷ் பேசும்போது... கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் ஒருநாள் கூத்து படத்திற்கு பிறகு நான் நடிக்கும் படம் இந்த உள்குத்து. பக்கா கமர்சியல் படம். இந்த படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று நினைத்ததால் ஒவ்வொரு காட்சிகளிலும் 40 டேக்குகள் வரை நடித்தோம். படத்தில் நடித்து முடிக்கிறதுவரை ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது. புதிய மன்னர்கள் படத்தில் நான் பார்த்து ரசித்த ஸ்ரீமன் அண்ணனுடன் இந்த படத்தில் நடித்தது சந்தோசமாக இருந்தது. ஸ்பாட்டில் காட்சிகளை உள்வாங்கி நம்மளையும் தாண்டி நடிப்பார். அதோடு காட்சிகளில் இன்வால்வாகி பயிற்சி எடுத்துக் கொண்டேயிருப்பார்.


மேலும், ஒரு வேலை கொடுத்தால் அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் டைரக்டர் ரஞ்சித்திற்கு என்னை பிடித்தது. அதே மாதிரிதான் ஒவ்வொரு படங்களிலுமே டைரக்டர்கள் சொன்னபடி நடித்துக் கொடுக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் கார்த்திக் ராஜா ரொம்ப தன்மையானவர். பொறுமையாக சொல்லித்தருவார். அதனால் உள்குத்து படம் நன்றாக வர வேண்டும் என்று ஒவ்வொருவருமே உழைத்தோம். விசாரணை படத்தில் நான் நடித்த டயலாக்கும் இந்த படத்தில் வரும். தியேட்டரில் ரசிகர்கள் ரொம்ப என்சாய் பண்ணுவார்கள். இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும்.


நந்திதா பேசும்போது... இந்த படத்தில் எனக்கு ரெண்டு சாங் இருக்கு. ஒரு சாங் ஷோலோ சாங். அட்டகத்தி படத்தில் நடித்தபோது எப்படி எனது பேஸ் பிரஷ்ஷாக இருந்ததோ அதேபோல் இந்த உள்குத்து படத்திலும் பிரஷ்ஷாக இருக்கிறேன். டிரைலர், சாங் பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது. தினேஷ் நடித்த அட்டகத்தி படத்தில்தான் நான் அறிமுகமானேன். அதன்பிறகு நான் நடித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு சிறிய ரோலில் வருவார். ஆனால் இந்த படத்திலும் அட்டகத்தி மாதிரி மீண்டும் இருவரும் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் தினேசுடன் காம்பினேசன் காட்சிகள் அதிகம் உள்ளது. அதோடு எனக்கு மெச்சூரிட்டியான ரோல். இந்த படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். நாகர்கோயில் பெண்ணாக நடித்திருக்கிறேன். என்னை கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்.


ஸ்ரீமன் பேசுகையில்... இந்த படத்தைப்பொறுத்தவரை நான் தயாரிப்பாளரை ஒருநாள்கூட செட்டில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு டைரக்டரை நம்புகிறார். கடல், கடல் சார்ந்த ஏரியாக்களில் உள்குத்து படமாகியிருக்கிறது. எனக்கு தெரிஞ்சு பாரதிராஜாவுக்கு அப்புறமா 25 வருடத்துக்குப் பிறகு முட்டத்தில அவ்ளோ பிரமாதமாக இந்த படம்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சொந்த படம் மாதிரி பண்ணுங்க என்றனர். எவ்ளோ நாள் தேவை என்றபோது வந்திருங்க சார் என்றனர். அதனால் தேங்காய் உடைக்குபோது போனேன், பூசணிக்காய உடைக்கிறது வரை இந்த படத்தில் நடித்துள்ளேன்.


அந்த அளவுக்கு ஹீரோவும் பெட்டர்மென்ட் பார்க்கிறார். பேக்ட்ராப், பைட் எல்லாமே புதுசா இருக்கும். கதைக்குத்தான் இந்த உள்குத்து டைட்டீல். கேச்சிங்காக வைக்கவில்லை. மக்களால் பாராட்டப்படும். ரொம்ப நாளா பேய் படம், காமெடி என ஒரேமாதிரியாக நடித்து வந்த எனக்கு போக்கிரி படத்திற்கு பிறகு இந்த படத்தில் சீரியஸ் ரோல் கிடைத்துள்ளது. 100 சதவிகிதம் நான் ஆடியன்சுக்கிட்ட கைதட்டல் வாங்குவேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in