ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னடத் திரையுலகத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற 'லூசியா' படத்தை இயக்கிய பவன்குமார், அடுத்து இயக்கிய 'யு டர்ன்' படத்தில் நாயகியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதற்கு முன் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா, முதன் முறையாக நாயகியாக நடித்த படம் 'யு டர்ன்'. இந்தப் படத்திற்காக அவருக்கு பாராட்டுக்களும், விமர்சனங்களும் அதிக அளவில் கிடைத்தன.
அதைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா. அந்தப் படத்திற்கடுத்து கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஒரு ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் பின்னணியில் மழை ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம் பெற உள்ளதாம். அதற்காக வரும் மழைக்காலத்தில்தான் பல காட்சிகளை எடுக்க உள்ளார்களாம். படத்திற்கு அனேகமாக 'தந்திரன்' என்ற தலைப்பை வைக்கலாம் என்று தகவல்.