பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் நிர்மலா கான்வென்ட். தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவர்களது மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா இப்படத்தில் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குனர் நாக கோடீஷ்வர ராவ் இயக்கத்தில் நாகார்ஜூனா தயாரித்துள்ள நிர்மலா கான்வென்ட் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கியுள்ள படக்குழு, படத்தை தணிக்கை அனுப்பவும் தயார் செய்து வருகின்றது. காதலை மையப்படுத்திய நிர்மலா கான்வென்ட் திரைப்படம் செப்டம்பர் 16ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா மேனன், சத்யா கிருஷ்ணன், சூர்யா, அனிதா சௌத்ரி, சமீர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரோஷன் சலூரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.