ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கஞ்சே எனும் தேசிய விருது வென்ற படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குகின்றார். சரித்திர திரைப்படமான இப்படத்திற்கு கௌதமிபுத்ர சடர்கனி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சடர்கனி மன்னனாக பாலகிருஷ்ணா நடிக்கின்றார். பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக ராஜா மாதாவாக பாலிவுட் நடிகையும் அரசியல் பிரபலமுமான ஹேமமாலினி நடிக்கின்றார். நடிகை ஸ்ரேயா பாலகிருஷ்ணாவிற்கு மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கின்றார்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன. இப்படப்பிடிப்பில் ஹேமமாலினி, ஸ்ரேயா, பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. அரன்மனை போன்ற செட்டில் ஹேமமாலினி, ஸ்ரேயா மற்றும் பாலகிருஷ்ணா ராஜ உடை அலங்காரத்தில் பங்கேற்கும் காட்சிகளின், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.