'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், அனில் கபூர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‛முபாரக்கா'. இந்தப்படத்தில் அர்ஜூன் கபூர், இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். இதில் ஹீரோயினாக நடிக்க நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கேட்டனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதுப்பற்றி விசாரித்ததில், படத்தில் சோனாக்ஷிக்கான ரோல் மிகவும் சிறியது என்றும், அதனால் தான் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த ரோலில் பரிணிதி சோப்ராவையும் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து அவரும் வேண்டாம் என நிரகாரித்துவிட்டார். இப்போது இந்தப்படத்தில் இலியானா, எமி ஜாக்சன், அதியா ஷெட்டி ஆகிய மூன்று ஹீரோயின்களாக நடிக்க முடிவாகி இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.