'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜீத் நடித்த வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அப்பா அம்மா செல்லம், கலிங்கா, சிந்தனை செய், மஞ்சள் வெயில் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தார்.
தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2005ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பாடகி அமிர்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரும் நேற்று கோர்டடில் ஆஜரானார்கள். நீதிபதி அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரையும் அரசு வக்கில் சந்தித்து பேசினார். இருவர் மனநிலையிலும் மாற்றம் இல்லை. விவாகரத்தில் உறுதியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.