ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த சுபிக்ஷா இப்போது சோலோ ஹீரோயின் ஆகிவிட்டார், பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர். அதன் பிறகு இங்கு வாய்ப்பு இல்லாமல் மலையாளம், கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா ரா ராஜசேகர், விஜய் மில்டன் இயக்கும் கடுகு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களிலும் ஹீரோயின் இல்லை. முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில் ஏ.வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
செல்வா, மகாபிரபு, சாணக்யா, ஏய் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் புதிய படம் நேத்ரா. இதில் வினய், தமன் ஹீரோவாக நடிக்கிறார்கள். சுபிக்ஷா ஹீரோயின். இவர்கள் தவிர ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், வின்செண்ட் அசோகன் நடிக்கிறார்கள். இது ஆக்ஷன் திரில்லர் படம். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் கனடாவில் நடக்கிறது.