எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஷ்வின் நடித்த வேதாளம் படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன இந்தப் படம் ஜெயா டி.வியில் வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாகிறது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி புதுப்பட போட்டியில் முன்னணியில் நிற்கிறது ஜெயா டி.வி.
வேதாளம் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஸ்ரீசாய் ராம் புரொடக்ஷன் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார், வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். 61 கோடியில் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ.100கோடியை சம்பாதித்த படம். சென்ற தீபாவளியில் வெளிவந்து தெறிக்க விட்டது. தங்கையை சீண்டிப்பார்த்த வில்லன்களை அண்ணன் போட்டு பொளக்கிற நவீன பாசமலர் கதை.
இப்போது சின்னத்திரையில் தெறிக்கப்போகிறது. கணிசமான விலை கொடுத்து வாங்கிய ஜெயா டி.வி, கணிசமான விளம்பரங்களுடன் படத்தை ஒளிபரப்புகிறது. தியேட்டரில் பார்க்க தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பு. விநாயகரை வணங்கிவிட்டு வேதாளத்தை ரசிக்கலாம்.