மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் பிரபலங்களுடன் ஜாலியாக உரையாடுவார். முக்கியமாக கொஞ்சம் ரிஸ்க்கான கேள்விகள் என்றால்கூட சிரித்த முகத்துடன் கேட்டு அவர்களிடமிருந்து அதற்கான பதிலை வாங்கி விடுவதில் வல்லவர். அதனால் நேயர்கள், பிரபலங்கள் மத்தியில் டிடிக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருந்து வருகிறது.
மேலும். அவர் சின்னத்திரை பிரபலமாக இருந்தாலும், வெள்ளித்திரையை சார்ந்தவர்களுடனும் நல்ல நட்பு வைத்திருக்கிறார். அந்த வகையில், சினிமா கலைஞர்களுக்கு பிறந்த நாள் என்றால் முதல் ஆளாக வாழ்த்து சொல்லி விடு வார் திவ்யதர்ஷினி. சமீபத்தில்கூட இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் அன்று அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தார் டிடி.
அதோடு, யுவனின் பாட்டுக்கு நான் பெரிய ரசிகை. மேலும் அவரை ஒரு பாட்டு பாடி, அதை வீடியோ பண்ணி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்றும் தனது மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் திவ்யதர்ஷினி.