ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் கூட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது வழக்கம். அந்தப் பாடல்களை தொன்று தொட்டு ஆங்கிலத்தில் 'ஐட்டம் சாங்ஸ்' என்று தான் அழைத்து வருகிறார்கள். எப்படியும் அந்தப் பாடல்கள் 'கிளப்' பாடல்களாகவோ அல்லது 'குத்து' பாடல்களாகவோ இருப்பது தான் வழக்கம். எந்த ஹீரோயினும் ஒரு பாடலுக்கு நடனமாடும் போது, அந்தப் பாடல் 'டூயட்' பாடலாக அமையுங்கள் என்று சொல்வதும் இல்லை. ஏனென்றால் அந்த ஒரு பாடலுக்கே அவர்களுக்கு சுமார் 1 கோடி வரை சம்பளம் தருவது, அவர்கள் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிப்பதற்கல்ல. எவ்வளவு கிளாமராக அவர்களை அந்தப் பாடல்களில் நடிக்க வைக்க முடியும் என்று தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பார்ப்பார்கள்.
தெலுங்கில் இன்று வெளியாகியுள்ள 'ஜனதா காரேஜ்' படத்தில் ஏற்கெனவே இரண்டு முன்னணி ஹீரோயின்கள், ஒருவர் சமந்தா, மற்றொருவர் நித்யா மேனன். இவர்கள் இரண்டு பேருக்குமே படத்தில் அதிக வேலையில்லை என விமர்சகர்கள் கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். அதே சமயம் படத்தில் ஒரு 'ஐட்டம் சாங்'கிற்கு காஜல் அகர்வால் நடனமாடியுள்ளார். “நேனு பக்கா லோக்கல்...' என்ற அந்தப் பாடலில் 'கெட்ட' ஆட்டம் போட்டிருக்கிறார் காஜல் அகர்வால். அந்தப் பாடல் வரும் போது தியேட்டரே களை கட்டுகிறதாம்.
இந்தப் பாடல் குறித்து சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய காஜல், அந்தப் பாடலை 'ஐட்டம் சாங்' என சொல்லாதீர்கள், அது ஒரு 'ஸ்பெஷல் சாங்' என்று சொன்னாராம். அது 'ஐட்டம்' பாடலாக இருந்தால் கூட ரசிகர்களுக்கு 'ஸ்பெஷல்' ஆகத்தான் இருக்கிறதாம். அதனால், காஜல் சொல்வது போலவே 'ஸ்பெஷல்' என்றே அழைப்போம்.