டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அம்மா கிரியேஷனின் வெள்ளி விழா ஆண்டான 25-ஆம் வருடத்தில் டி.சிவாவின் பிரமாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் திரைப்படம்
“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்”. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க, அவருடன் ஹீரோயின்களாக ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி நடிக்கிறார்கள். சூரி, ‛நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கிறார்கள். இளவரசு இயக்குகிறார்.
இப்படம் பற்றி இயக்குனர் இளவரசு கூறியதாவது... “காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது, இந்தாண்டு டிசம்பரில் படம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.