‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திருநாள் படத்திற்கு பின்னர் ஜீவா நடிப்பில் கவலை வேண்டாம் திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகின்றது. காஜல் அகர்வால் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்கும் கவலை வேண்டாம் திரைப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கின்றார். இப்படத்தை தெலுங்கிலும் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் சர்தார் கபார் சிங் படத்தில் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால், அப்படத்திற்கு பின்னர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்திலும் நாயகியாக நடிக்கின்றார். காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதால் கவலை வேண்டாம் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 7ல் தமிழில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள கவலை வேண்டாம் திரைப்படம் தெலுங்கிலும் அதே தேதியில் வெளிவரும் என கூறப்படுகின்றது.