தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் நம்பர்-1 ஹீரோயினாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா. முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள் மட்டுமின்றி புதுமுகங்கள், இளம் இயக்குநர்களுடன் தைரியமாக பணியாற்றி, அதில் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார். தற்போது விக்ரமுடன் இருமுகன், கார்த்தியின் காஷ்மோரா படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.
இந்நிலையில் டிமான்டி காலனி எனும் த்ரில்லர் படத்தை இயக்கி வெற்றி பெற்ற அஜய் ஞானமுத்து அடுத்தப்படியாக ‛இமைக்கா நொடிகள் எனும் படத்தை இயக்குகிறார். ரொமான்ட்டிக், த்ரில்லர் கதையாக உருவாக உள்ள இப்படத்தில், நயன்தாரா தான் முதன்மை ரோலில் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதையை எழுதும்போதே நயன்தாராவை மனதில் வைத்து தான் எழுதினாராம் இயக்குநர். அதன்படி நயன்தாராவிடமும் கதையை சொல்ல அவரும் உடன் சம்மதம் சொல்லிவிட்டார்.
நயன்தாராவுடன், அதர்வாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஆனால் அதர்வாவுக்கு ஜோடி நயன்தாரா இல்லை, வேறு ஒரு நடிகை நடிக்க உள்ளார். முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கிறார், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை தயாரித்த ஜெயக்குமார் தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.