Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திப்பு சுல்தானாக நடிக்கிறார் கமல்...!

03 செப், 2011 - 13:50 IST
எழுத்தின் அளவு:

 மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன். இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்தபடமும் வரலாற்று சம்பந்தப்பட்ட படம்தான். மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கையை மையமாக மைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இதற்காக கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.

இது குறித்து ஜான்பால் கூறும்போது, கதையை எழுதும்போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல்தான் பொருத்தமானவர் என உணர்ந்தோம். அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும். வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது. கமலுடன் நடிக்கும் இதர கேரக்டர்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. யுத்தம், சுதந்திரப் போராட்டம், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் இருக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

fahath meeran - mudukulathur,இந்தியா
26 மே, 2012 - 14:01 Report Abuse
 fahath meeran நல்வாழ்த்துக்கள். மருதநாயகம்
Rate this:
தமிழ் நண்பன் - AUSTRALIA,ஆஸ்திரேலியா
12 ஏப், 2012 - 05:09 Report Abuse
 தமிழ் நண்பன் கமலுக்கு மிகவும் பிடித்தவர் திப்பு! அவரின் செல்ல நாய்க்குட்டிக்கு முன்பு திப்பு என்பதுதான் பெயராய் இருந்தது! இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
Rate this:
vasudevan - minjur,இந்தியா
12 ஏப், 2012 - 05:02 Report Abuse
 vasudevan பொருத்தமான படம். பொருத்தமான நடிகர். டபுள் ஓகே.
Rate this:
venkat - mahalapye,போஸ்ட்வானா
27 நவ, 2011 - 00:13 Report Abuse
 venkat உன்னால் மட்டுமே எல்லாம் முடியும் யார் நீ தமிழன் ........வெற்றி பெற வாழ்த்துகள் தலைவா .......கலை உலக நாயகன் நீ நீ நீ ...வெங்கட் ஆப்ரிக்கா
Rate this:
sekar - chennai,இந்தியா
08 செப், 2011 - 10:41 Report Abuse
 sekar தயவு செய்து நடிக்க வேண்டாம் திப்பு சுல்தான் என்ற பெயர் சொன்னாலே கஷ்டம் தான்
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in