‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விக்ரம் நடிக்கும் படங்கள் என்றால் தரமான கதைகளை சுற்றித்தான் பின்னப் பட்டிருக்கும். அதோடு கதையில் தனது தனித்திறமையை வெளிப்படுத்த தேவையான விசயங்கள் இருந்தால் மட்டுமே அந்த கதைகளை டிக் செய்வார் விக்ரம். அப்படி அவர் கேட்ட பல கதைகளில் டபுள் ஓகே சொல்லி நடித்த படம்தான் இருமுகன். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் என இரண்டு நடிகைகள் நடித் துள்ளனர்.
செப்டம்பர் 9-ந்தேதி ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதையடுத்து நயன் தாரா பாடல் காட்சிகளில் அதிக கிளாமராக நடித்திருப்பார். அதனால்தான் யுஏ கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அப்படக்குழு வினரைக்கேட்டால், இருமுகனில் நயன்தாரா மிதமான கிளாமரில்தான் நடித்திருக்கிறார். படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததற்கு அவர் காரணமல்ல. ஆனால், மெடிசன் டீலிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருப்பதே இந்த சான்றிதழுக்கு காரணம் என்கிறார்கள்.