ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினியுடன், எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஏமி ஜாக்சன், இப்போது, பாலிவுட்டிலும் ரொம்ப பிசி. சல்மான் கான் நடித்து, சூப்பர் ஹிட்டடித்த டபாங் படத்தின் மூன்றாம் பாகம், விரைவில் தயாராகவுள்ளது. இதில், சல்மானுடன் ஜோடி சேரப் போவது, சாட்சாத் ஏமி ஜாக்சன் தானாம். சமீபகாலமாக, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் பார்ட்டிகளில், சல்மானையும், ஏமி ஜாக்சனையும் ஒன்றாக பார்க்க முடிகிறது. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், இருவரும் ஒன்றாக பார்ட்டிகளில் பங்கேற்கும் படங்களும் பட்டையை கிளப்புகின்றன. இதுமட்டுமல்லாமல், பாடகி அவதாரமும் எடுத்துள்ளார் ஏமி. பஞ்சாபி மொழியில் தயாராகும் இசை ஆல்பத்தில், 'லக்கி கிலாடே' என, துவங்கும் அட்டகாசமான பாடலை, சொந்த குரலில் பாடி அசத்தியுள்ளார் ஏமி.