இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
சில வருடங்களுக்கு முன் அவ்வபோது சில படங்களில் நடித்து வந்தார் பிரசன்னா. அதன்பிறகு திடீரென சிலகாலம் காணாமலே போய்விட்டார். படங்களில் பார்த்து வந்த பிரசன்னாவை இப்போதெல்லாம் ஏதாவது ஃபேஷன் ஷோக்களில்தான் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விஷாலை வைத்து மிஷ்கின் அடுத்து இயக்கவிருக்கும் 'துப்பறிவாளன்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரசன்னா.
மிஷ்கின் இயக்கத்தில், 'அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 'காலகூத்து', 'நிபுணன்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் பிரசன்னா!
இதுஒருபுறம் இருக்க பிரசன்னாவை மணந்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன சினேகா, திருமணம், குழந்தை என படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா, இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். பிருத்விராஜ் தயாரிப்பில் மம்முட்டி நடிக்கும் 'தி கிரேட் ஃபாதர்' என்ற மலையாள படத்திலும் நடிக்க இருக்கிறார் சினேகா.
இந்தப் படத்தை அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சினேகா. அதாவது இந்தப் படத்தில் முக்கிய வேடமொன்றில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக குணசித்திர வேடத்தில் நடிக்கிறாராம் சினேகா.