'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தனியார் பண்பலை வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றிய பலருக்கும் திரையுலகில் கதவுகள் விரியத்திறக்கும். ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக இருந்த சிவா, செந்தில், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் ஹீரோக்களாகிவிட்டனர். அதே ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றிய சுசித்ரா பின்னணி பாடகியானார். தர்புகா சிவா கிடாரி படத்துக்கு இசையமைக்கிறார். இந்த வரிசையில் ஆர்.ஜே. பாலாஜியும் சினிமாவில் பிசியாகிவிட்டார்.
வடகறி உட்பட சில படங்களில் தலைகாட்டினாலும், பாலாஜிக்கு பிரேக்காக அமைந்தது நானும் ரௌடிதான் படம். இந்தப் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தில் கார்த்தியுடன் நடித்து வருகிறார். அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் உட்பட அரைடஜன் படங்களில் நடிக்கவிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த படங்கள் தவிர மகேஷ் பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தெலுங்குப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பும் ஆர்.ஜே.பாலாஜிக்கு கிடைத்துள்ளது.
தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவின் நண்பராக நடிக்கிறாராம் பாலாஜி! இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார் பாலாஜி!