Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதியின் ஓ.கே. ஓ.கே. படத்துக்கு சிக்கல்!

03 செப், 2011 - 12:00 IST
எழுத்தின் அளவு:

ஆட்சி மாறினால், காட்சிகளும் மாற வேண்டும் என்பதுதானே நியதி. அந்த நியதிக்கு உதயநிதி மட்டும் விதிவிலக்கா என்ன? அவர் நடித்து வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு முன்பு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தவர்கள், இப்போது ரெட் சிக்னல் போட்டு சூட்டிங்கிற்கு தடை போட்டு வருகிறார்கள் என்பதுதான் வேதனை.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் கடந்த ஆட்சியின்போது சென்னையில் எங்கு வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்த தாராளம் காட்டப்பட்டது. இப்போது அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும்படி ஆகியிருக்கிறதாம் நிலைமை. முன்பு சூட்டிங் எடுத்த அதே சாலைகளிலும், கட்டிடங்களிலும் மீண்டும் பேட்ச் வெர்ர்க் என்று சொல்லப்படும் விடுபட்ட காட்சிகளை எடுக்க வேண்டுமாம். ஆனால் போய் பர்மிஷன் கேட்டால், இங்கெல்லாம் எடுக்கக் கூடாதே என்கிறார்களாம். சென்னையில் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றில் சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அப்போது வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்று தியேட்டரை தந்த நிர்வாகம், இப்போது போய் நின்றால், தயவு செய்து வராதீங்க. எங்கயாவது காட்சியை படமாக்கிக்கோங்க என்கிறார்களாம். இதனால், சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது ஒ.கே. ஓ.கே. டீம்!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

kk - uae,இந்தியா
04 செப், 2011 - 14:25 Report Abuse
 kk அப்போ படத்தின் பெயரை நாட் ஓகே நாட் ஓகே என்று மாத்தணும்.இதுதான் படத்திற்கு சரியான பெயர்.
Rate this:
வடுவூறான் - Singapore,சிங்கப்பூர்
04 செப், 2011 - 10:39 Report Abuse
 வடுவூறான் அப்படியே படப் பிடிப்பை ஒரு வழியாக முடித்து விட்டாலும் அடி மாட்டு விலைக்கு விநியோகஸ்தர்கள் கேட்டு இவனுங்களை அசிங்கப் படுத்தனும்! திரையிட தியேட்டர் கிடைக்காது அவஸ்தைப் படனும். என்னா ஆட்டம் ஆடினானுவ ஆட்சியில இவிங்க அப்பாரும், தாத்தாவும் இருந்தபோது?
Rate this:
முத்து - Abu Dhabi,இந்தியா
04 செப், 2011 - 09:54 Report Abuse
 முத்து இவங்க அடுத்த ஆட்சில இந்த தியட்டர் இங்க இருக்காது கண்டிப்பா..... ஏன் சினிமாவ சினிமாவ பாருங்க பழிவாங்கதிங்க.......
Rate this:
வேலன் - tuticorin,இந்தியா
03 செப், 2011 - 13:32 Report Abuse
 வேலன் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Rate this:
srini - salem,இந்தியா
03 செப், 2011 - 13:29 Report Abuse
 srini என்ன தமிழ் பற்று! தமிழ் காவலர் குடும்பத்துக்கு அதன் இளைய தலைமுறையின் சன்மானம் ஓகே ஓகே
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in