ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இணைய உலகைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்கள்தான் முதன்மையானவர்கள் என்பதை இன்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித்தின் 50வது படமாக 2011ம் ஆண்டு இதே நாளில் வெளியான படம் 'மங்காத்தா'.
அதற்கு முன் 'அசல், ஏகன்' என இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்திருந்த அஜித்துக்கு அடுத்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம். வெங்கட் பிரபு மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய 50வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். வெங்கட்டும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் இன்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு 'மங்காத்தா' படத்தை மகத்தான வெற்றிப் படமாக்கித் தந்தார்.
'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கில் 'இன்னும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா நடிக்கிறது' என்ற அஜித்தின் ஒரு வரி வசனமே அவருடைய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, வைபவ், அஸ்வின், பிரேம்ஜி, அஞ்சலி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா என ஒரு நட்சத்திரக் கூட்டமே படத்தில் நடித்தது.
யுவனின் தீம் மியூசிக்கும், பாடல்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. அடுத்து என்ன என்று எதிர்பார்க்காத விதத்தில் திரைக்கதை நகர்ந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் கொடுத்து பரபர ஆக்ஷன் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. 'மங்காத்தா' படத்திற்குப் பிறகு அந்த அளவிலான வேறொரு ஆக்ஷன் படம் இதுவரை அஜித்திற்கு வரவில்லை என்பதை அஜித் ரசிகர்களே ஏற்றுக் கொள்வார்கள். இப்போதும் 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என அஜித் ரசிர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது, அஜித்தின் கையில்தான் உள்ளது.
ரசிகர்களின் ஆவலை அஜித் பூர்த்தி செய்வாரா, அல்லது வழக்கம் போல 'சிறுத்தை' சிவா படத்தில் நடித்துக் கொண்டேயிருப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம்.