இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜித்துக்கு ரசிகர் மன்றமே இல்லை என்றபோதும், அவருக்கு தமிழகமெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் அவரது ரசிகர்கள் தானாக சேர்ந்த கூட்டமாக இருக்கின்றனர். மேலும், அஜித் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர், ஆடியோ என அனைத்தையும் இணைய தளங்களில் பெரிய அளவில் டிரண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி அஜித் படங்கள் ரிலீசாகும்போது தங்களது சொந்த செலவில் பேனர், கட்அவுட் வைத்து பரபரப்பு கூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் வெளியாகி இன்றோடு 5 வருடங்கள் ஆகிறது என்பதால் அதை கொண்டாட அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். தமிழகத்தின் பல ஏரியாக்களிலும் மங்காத்தா அஜித்துக்கு பேனர்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் மங்காத்தா அஜித்தின் போஸ்டரை 400 அடியில் தயார் செய்துள்ளனர். மேலும், மங்காத்தா போஸ்டர்களில் மங்காத்தா-2 படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.