இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதையடுத்து, தாய்குலமே தாய்குலமே, கும்பகோணம் கோபாலு ஆகிய தமிழ் படங்களுக்காக மாநில அரசு விருது பெற்ற அவர், தேவி, லிட்டில் ஹார்ட்ஸ் ஆகிய தெலுங்கு படங்களுக்காகவும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஆந்திர அரசின் மாநில விருதுகளை பெற்றார். அந்த வகையில் ஏராள மான தென்னிந்திய மொழிகளில் சிறுவனாக நடித்து வந்த மகேந்திரன், விழா படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார்.
அதையடுத்து தற்போது அக்கி, போரிட பழகு ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். இதில் அக்கி படத்தில் ஹாக்கி விளையாட்டு வீரராக நடிக்கிறார். முன்னதாக, ஒன்றரை மாதம் ஹாக்கி விளையாட்டை பயிற்சி எடுத்து இந்த படத்தில் நடிக்கத் தொடங்கிய மகேந்திரன், இந்த படத்திற்காக ஹாக்கி மைதானத்தில் விளையாடியபடி நடித்தபோது பலமுறை கீழே விழுந்ததில் அவரது கால் முட்டிகளில் பலத்த காயம் ஏற்பட்டதாம். இருப்பினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிஜ வீரராகவே மாறி நடித்திருக்கிறாராம். மேலும், கிரிக்கெட், கபடி, ஓட்டப்பந்தயம் என பல விளையாட்டுகளை மையமாக வைத்து உருவான படங்கள் வெற்றி பெற்றிருப்பதால், ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த அக்கி படமும் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார் மகேந்திரன்.