ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் (SKIP TRACE) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம் தமிழில், “இரு கில்லாடிகள்'' என்ற பெயரில் வெளியாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர், SKIP TRACE (இரு கில்லாடிகள்) படத்தை செப்டம்பர் 2 ம் தேதி வெளியிடுகிறார்.
ரஜினி நடித்த ‛கபாலி' படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த (SKIP TRACE ) படமும் அன்றே ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் வருகிற செப்டம்பர் 2 அன்று வெளியாகும் இந்த இரு கில்லாடிகள் படத்தை, ரஜினி பார்ப்பாரா என்று ஜாக்கிசான் மிகவும் ஆவல் கொண்டு உள்ளதாக அவரது தரப்பிலிருந்து கூறப்படுகிறது.