வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல நடிகர் நாகார்ஜூனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில், அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக திரை உலகில் நாயகனாக அறிமுகமானார். அப்படம் தோல்வியைத் தழுவவே நல்ல கதைகள் மற்றும் இயக்குனரை அகில் இது வரை தேடி வருகின்றார். வம்சி, ஹனு ராகவ்புடி போன்ற இயக்குனர்களிடம் கதை கேட்ட அகில், ஹனுராகவ்புடி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
ஆனால் அகில் - ஹனு ராகவ்புடி கூட்டணியில் உருவாகவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது இயக்குனர் மாருதி இயக்கும் படத்தில் அகில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடிப்பில் பலே பலே மகாதேவோ, வெங்கடேஷ் நடிப்பில் பாபு பங்காராம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மாருதி அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் அகில் நடிக்கவுள்ளாராம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இப்படத்திற்கு இசையமக்கும்படி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.