தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தர்மதுரை' படம் சமீபத்தில் வெளிவந்தது. சீனு ராமசாமி இயக்கினார். ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்தார். யுவன் இசை. சுகுமார் ஒளிப்பதிவு.
இந்தப் படம் மக்கள் வரிப்பணத்தில் மருத்தும் படிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாமல், பணக்கார ஆஸ்பத்திரிகளில் பணிபுரியாமல் ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம். படத்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில் படத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இலசவமாக பார்க்க தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி அடையாள எண்ணை குறிப்பிட்டு 91-9566042832 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால். அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தியேட்டரில் அவர்கள் படம் பார்க்க இலவச டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தமிழ்நாடு முழுமைக்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தும்.