ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
மங்கை என்ற சின்னத்திரை தொடர் மூலம் புகழ் பெற்றவர் ஹரிராஜன். இவர் மார்க்கெட் இல்லாத 5 ஹீரோயின்களை ஒருங்கிணைத்து மன்மத ராஜ்யம் என்ற பெயரில் ஒரு படத்தை துவங்கினார். இதில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஷிவானி என 5 ஹீரோயின்கள் நடித்தனர். கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே ஷெட்யூலாக படத்தை எடுத்து முடித்தார் ஹரிராஜன். படத்தின் தலைப்பு ஷகிலா பட தலைப்பு மாதிரி இருக்கிறது என்ற பலரும் சொல்ல இப்போது இளமை ஊஞ்சல் என்று மாற்றி விட்டார்கள்.
4 ஹீரோயின்கள் ஒரு படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்கிறார்கள். அவர்களை அவர்களது டப்அச் பாய்களே கடத்துகிறார்கள். அவர்கள் ஏன் கடத்துகிறார்கள், அவர்கள் டிமாண்ட் என்ன என்பதுதான் கதை. அவர்களை மீட்கும் போலீஸ் அதிகாரியாக நமீதா நடித்திருக்கிறார். கடத்தல் கும்பல் தலைவனாக இயக்குனர் ஹரிராஜனே நடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்ட இந்தப் படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. வருகிற 2ந் தேதி வெளிவருகிறது. 5 ஹீரோயின்களும் கிளாமரை வாரி வழங்கியிருக்கிறார்கள்.