மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகைகளில் ஆலியாபட்டும் ஒருவர். இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஆலியா நடிப்பில் உருவாகி கொண்டுயிருக்கும் படம் டியர் ஜிந்தகி. இப்படத்தில் ஆலியா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதனிடையே ஆலியா தனது அடுத்த படமான "பத்ரிநாத் கி துல்ஹனியா" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷாரூக்குடன் நடித்ததை பற்றி கேட்டனர்
இதற்கு பதில் அளித்த ஆலியா..." இந்த வருடத்தின் இறுதில் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கேக் மேல் வைக்க பட்ட செர்ரி பழம் போல் இருந்தது. நான் என் மனம் திறந்து கூறுகிறேன் இப்படத்தின் வெளியீட்டில் இரண்டு காரணத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஒன்று முதல் முறையாக ஷாரூக்கானுடன் நடித்த படம் இது என்பதாலும் ,இப்படத்தால் என் கனவு நிறைவேறியது. இரண்டாவதாக இப்படம் மிகவும் எளிய மற்றும் தனித்துவம் வாய்ந்த படம் " என்றார்.
டியர் ஜிந்தகி இந்த வருடம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.