தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணியில் இருக்கும் ஸ்ருதிஹாசனும் , தமன்னமாவும் அவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்து வைத்துள்ளனர். நடிப்பது மட்டும் இல்லாமல் பாடுவதிலும் திறமையுடன் இப்பவர் ஸ்ருதி. தற்போது ஸ்ருதி, தமிழில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேல் ,சூரி நடித்து வரும் "கத்தி சண்டை" படத்தில் ஒரு பாடல் பாடயிருப்பதாக செய்திகள் வெளியாகின. இயக்குநரும் அப்படத்தில் ஸ்ருதியை பாட வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என நினைப்பதால் ஸ்ருதியை பாடும்படி கேட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் ஸ்ருதி இப்படத்தில் பாட ரெடியாக இருக்கிறாராம். இந்தப்பாடலை விரைவில் பதிவு செய்ய இருக்கிறார்கள். கத்தி சண்டை படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார் . ஹிப் ஹாப் தமிழா இசையில் ஸ்ருதி பாடுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்தப்பாடல் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கயிருப்பதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
கத்தி சண்டை படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.