இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டாய்லெட் : ஏக் பிரேம் கதா படத்தில் அக்ஷைகுமார் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இப்படத்தை நீரஜ் பாண்டே தயாரிக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி நீரஜ் பாண்டே விளக்கி உள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், டாய்லெட் : ஏக் பிரேம் கதா படத்தை நான் இயக்கவில்லை. இப்படத்தின் கதையை எழுதியது எனது டீம் உறுப்பினர்களான சித்தார்த்தும், கரிமாவும் தான். நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன் அவ்வளவு தான். இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் வேலைகள் துவங்கும். இப்படத்தை எனது எடிட்டர் தான் இயக்குகிறார் என்றார். இப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட உள்ளது. தற்போது, செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ள எம்.எஸ்.தோனி படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் நீரஜ் பாண்டே.