நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தும், அவர்களை வைத்து 1980 களில் அதிக படம் தயாரித்தவர் என்ற பெருமை பெற்றவர் பழம்பெரும் நடிகர் - தயாரிப்பாளர் கே.பாலாஜி. இவர் பில்லா, வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி, தீ, விதி, விடுதலை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தமிழ், மலையாளம், இந்திய உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி, வைட் ஏஞ்சல் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாலாஜியின் பேத்தியும், சுரேஷ் பாலாஜியின் மகளுமான சித்தாரா சுரேஷின் திருமணம் ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடந்தது. சித்தாரா சுரேஷ் - ஆதித்யா திருமணம் சென்னை வள்ளியம்மை ஹாலில் கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது. இதில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.