அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2016ம் ஆண்டின் தீபாவளித் திருநாள் வர இன்னும் சில மாதங்களே உள்ளன . செப்டம்பர் மாதத்தில் பல பெரிய படங்கள் வெளிவர உள்ளன. தீபாவளிக்கு முன்னதாக இப்படி பெரிய படங்கள் வருவது ஆச்சரியம்தான் என்றாலும் அந்தப் படங்கள் அதிகமான போட்டிகள் இல்லாத நிலையிலும் வெளியாவதுதான் கவனிக்க வேண்டியது. எப்படியும் ஒவ்வொரு பெரிய படத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது இடைவெளி இருக்கும்படி சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
அந்த விதத்தில் வரும் வெள்ளி, செப்டம்பர் 2ம் தேதியன்று சசிகுமார் நடித்துள்ள கிடாரி, மணிகண்டன் இயக்கியுள்ள குற்றமே தண்டனை ஆகிய படங்களும் அத்துடன் சில சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன. செப்டம்பர் 9ம் தேதி விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி தனுஷ் நடித்துள்ள தொடரி படமும், 23ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை, விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான், விக்ரம் பிரபு நடித்துள்ள வீர சிவாஜி ஆகிய படங்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ப்ரூஸ் லீ படம் வெளிவரவும் வாய்ப்புகள் அதிகம்.
கிடாரி படம் சசிகுமாருக்கு திருப்புமுனையைக் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை. குற்றமே தண்டனை படம் இயக்குனர் மணிகண்டனை காக்க முட்டை படத்திற்குப் பிறகும் பேச வைத்தாக வேண்டும். விக்ரமுக்கு இருமுகன் வெற்றியைக் கொடுத்தால்தான் அவரால் அடுத்த சில வருடங்கள் தாக்குப் பிடிக்க முடியும். தனுஷுக்கு முந்தைய தோல்வியை தொடரி சரிக்கட்ட வேண்டும். விஜய் சேதுபதிக்கு ஆண்டவன் கட்டளை மீண்டும் வெற்றியைத் தக்க வைக்க வேண்டும். பிச்சைக்காரன் வெற்றியைவிட சைத்தான் பெரிய வெற்றி பெற்றால் விஜய் ஆண்டனியின் அடுத்த சில வருடங்களுக்கான கால்ஷீட் நிரம்பிவிடும். விக்ரம் பிரபுவுக்கு அடுத்த நம்பிக்கை வீர சிவாஜி மட்டுமே. ஜி.விக்கு ப்ரூஸ் லீ கை கொடுத்தாக வேண்டும் இல்லையென்றால் அடுத்த மாதம் வரும் கடவுள் இருக்கான் குமாரு பார்த்துக் கொள்வார்.
செப்டம்பர் படங்கள் சிறப்பாக அமைந்தால் அது தீபாவளிக்கும் சேர்த்து ஒரு அட்வான்ஸ் கொண்டாட்டமாக அமைந்துவிடும்.