ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் தனது அடுத்த படமான அகிரா படத்தை இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களை மையமாக கொண்ட படங்களை தேர்வு செய்து தான் இயக்க என்ன காரணம் என விளக்கினார். பேட்டியில் அவர், உலகம் முழுவதிலும் உள்ள சினிமாக்கள் எப்போதும் ஆண்களை பெரிய அளவில் காட்டுவதாகவே உள்ளன. பெண்கள் எப்போதும் அவர்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே பெண்களை மையப்படுத்திய கதைகளை நாம் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் இப்போதாவது நம்மை மாற்றிக் கொள்ளலாம். பெண்களின் கோணத்தில் இருந்து கதை சொல்லுங்கள் என்றார். அகிரா படத்தில் முக்கிய வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது.