ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
காமெடி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருக்கும் அஸார் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகும் படம் கடலை போட பொண்ணு வேணும். அவர் கடலை போடும் பெண்ணாக மனீஷா நடிக்கிறார். படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், மனோகர் உள்ளபட பலர் நடிக்கிறார்கள். சமுத்திரகனி, மூர்த்தியிடம் உதவி இயக்குனராக இருந்த சிவகார்த்திக் இயக்குகிறார். சுதர்சன் இசை அமைக்கிறார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
"மதுரையைச் சேர்ந்த அஸாருக்கு தனது நண்பர்கள் பெண்களோடு கடலை போடுவதை பார்த்து பொறாமை. உங்களை விட சூப்பர் பெண்ணுடன் கடலை போட்டு காட்டுகிறேன் என்று சவால் விட்டு சென்னைக்கு கிளம்பி வருகிறாராம். அப்படி வந்தவருக்கு கடலை போட பெண் கிடைத்ததா. அல்லது இவரை கடலை மாதிரி வறுத்து எடுத்தார்களா என்பதுதான் கதை. சூது கவ்வும் பாணியிலான பிளாக் காமெடி படம். தலைப்பு ஒரு காமெடிக்காகத்தான் வைக்கப்பட்டுள்ளது. மற்ற காரணம் எதுவும் இல்லை. இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்கிற படம்" என்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.