‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அனிருத்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான எல்லா பாடல்களின் பாடல்களுமே ஹிட்டடித்துள்ளன. அதன்காரணமாகவே தனது படங்களுக்கு அவருக்கு சிபாரிசு செய்து வரும் சிவகார்த்திகேயன், ரெமோ படத்திற்காக அனிருத் கொடுத்துள்ள பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் என்று கூறி வருகிறார். அதோடு, பீப் சாங் சர்ச்சையில் சிக்கிய பிறகு அனிருத்தின் மார்க்கெட் பரபரப்பு குறைந்து காணப்படும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் எகிறி விடும் என்கிறார்கள்.
மேலும், இந்த ரெமோ படத்தில் இடம்பெற்றுள்ள செஞ்சிட்டாளே பாடலின் சிங்கிள் ட்ராக்கிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக உற்சாகத்தில் இருக்கிறார் அனிருத். அதோடு, இதற்கு முன்பு தனது இசையில் டைரக்டர் விக்னேஷ்சிவன் எழுதிய, எங்கடி பொறந்தே, சான்சே இல்ல, எனக்கென யாரும் இல்லையே, தப்பாதான் தெரியும், தங்கமே, ஆளுமா டோளுமா என அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் என்பதால், இந்த ரெமோ படத்தில் ஆடியோ செப்டம்பர் 5-ந்தேதி வெளியான பிறகு இந்த செஞ்சிட்டாளே பாடலும் அந்த சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்து விடும் என்கிறார்.