பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
கார்த்தியின் கேரியரில் மறக்க முடியாத படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இந்தப் படத்துக்காக வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுத்தார் கார்த்தி. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் படு தோல்வியடைந்தது மட்டுமல்ல, கார்த்திக்கு மிகப்பெரிய சறுக்கலையும் கொடுத்தது.
இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் காஷ்மோரா படத்தை என்ன காரணத்தினாலோ ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் ஒப்பிட்டிருக்கிறார் கார்த்தி. தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் கார்த்தியின் 'காஷ்மோரா' படத்தின் டப்பிங் வேலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இப்போது 'காஷ்மோரா'வின் அனைத்து டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டது, ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு மிகவும் சவாலாகவும், என்னை சோர்வாகவும் ஆக்கிவிட்டது ஆனால் மன நிறைவை தந்தது' என்று கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.
அந்த அறிவிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை குறிப்பிட்டிருப்பது காஷ்மோரா படத்துக்கு நெகட்டிவ்வான கமெண்ட் வர காரணமாகிவிட்டது.