'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாகித் கபூரும் ஒருவர். இவருக்கு கடந்தாண்டு, டில்லியை சேர்ந்த மீரா ராஜ்புட் உடன் திருமணம் நடந்தது. இதையடுத்து மீரா, கர்ப்பமானார். நேற்று மீராவிற்கு பிரசவ வலி ஏற்பட மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை ஷாகித் கபூர் தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பட தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛அவள் வந்துவிட்டால், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை, அனைவருக்கும் நன்றி'' என்று கூறியிருக்கிறார்.