இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முத்த மன்னனான இம்ரான் ஹாஸ்மி, விரைவில் தயாரிப்பாளராக களமிறங்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, இப்போது இம்ரான் ஹாஸ்மி தயாரிப்பாளராகிவிட்டார். அவர் தன் முதல்படமாக ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தை தயாரிக்கிறார். கூடவே ஹீரோவாகவும் நடிக்கிறார்.
ரெமோ டிசோசா இயக்கும் இப்படத்திற்கு ‛கேப்டன் நவாப்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இம்ரான் ஹாஸ்மி, இந்திய மற்றும் பாகிஸ்தான் கொடியின் பின்னணியில், ராணுவ உடையணிந்து அமர்ந்தபடி கையில் இரண்டு துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்துள்ளார். கேப்டன் நவாப் என்ற தலைப்போடு ‛டூ கன்ட்ரீஸ், ஒன் சோல்ஜர்' என்ற சப்-டைட்டீலும் கொடுத்துள்ளார்கள். தற்போது இதன் படப்பிடிப்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்தாண்டு படம் ரிலீஸாகும் என தெரிகிறது.