டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தான் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தபோதும் சம்பள விசயத்தில் இன்னமும் அடக்கி வாசித்து வருகிறார் விஜய்சேதுபதி. அதனால் அவரை சீப் அண்ட் பெஸ்ட் ஹீரோவாக நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதேப்போல் அவரை தொடர்பு கொள்வதும் எளிது. யாராவது தன்னிடம் பட விசயமாக சந்திக்க வேண்டும் என்று சொன்னால் மாதக்கணக்கில இழுத்தடிக்காமல் அவர்களை உடனடியாக ஸ்பாட்டுக்கே வரவைத்து கதை கேட்கிறார். கதை பிடிக்கவில்லை என்றாலும் ஓரிரு நாட்களிலேயே சொல்லி விடுகிறார்.
இந்த நிலையில், இயக்குனர்-ஒளிப்பதிவாளரான காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்துள்ள விஜயசேதுபதியை அடுத்தபடியாக ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் பெயரிடப்படாத படத்தில் இயக்கி வருகிறார். அதைப்பார்த்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இன்னும் சில ஒளிப்பதிவாளர்களும் விஜயசேதுபதியிடம் கதை சொல்லி வருகின்றனர். அப்படி சில ஒளிப்பதிவாளர்களிடம் கேட்ட கதைகளில் ஒரு கதையில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம் விஜயசேதுபதி.